லொறி மோதியதில் இளைஞன் உயிரிழப்பு

ஹலவத்தை திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை ஏற்றிக்கொண்டிருந்த இளைஞன் வீதியில் தென்னை நெல் நாற்றுகளை ஏற்றிச் சென்ற பாரிய லொறியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹலவத்த திகன்வெவ மொரக்கலே பகுதியைச் சேர்ந்த ஜனிது தனஞ்சய (வயது – 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தனது தந்தைக்கு சொந்தமான சிறிய பேக்கோவை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற போது உழவு இயந்திரத்தில் எரிபொருள் தீர்ந்து போனதை அடுத்து எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்த போது அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகிய பாரிய லொறியில் மோதியதில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு லொறியில் முன் சக்கரங்கள் இளைஞனின் மீது ஏறியதால் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.