
புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்கு சென்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்
இரத்தினபுரி அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மனைவியை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொடூரமாக கொலை செய்த கணவர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிரியெல்ல பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த மனைவி தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 43 வயதான சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
