
மாமியார் விரைவில் சாக வேண்டும்: வைரலாகும் மருமகளின் பிரார்த்தனை
இந்தியாவில் மருமகள் தமது மாமியார் உயிரிழக்க வேண்டும் என கோவிலில் வேண்டுதல் வைத்த தாள் நாணயத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் தத்தாத்ரேயா கோவிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்மையில் நடைபெற்றது.
இதன் போது ரூபா 50 தாள் நாணயத்தில் வெள்ளையான பகுதியில் ஏதோ எழுதப்பட்டு இருந்ததை அவதானித்த கோவில் ஊழியர் படித்துப் பார்த்துள்ளார். அதில் என் மாமியார் விரைவில் சாக வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்த ரூபாய் நோட்டு சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருவதுடன் இணையவாசிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
