
சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து
-யாழ் நிருபர்-
சாவகச்சேரி ஏ-9 வீதி, தபால் கந்தோர் சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்தவர் காயங்களுக்குள்ளானார்.
இதேவேளை அவரோடு இணைந்து பயணித்த பெண்மணியும் சிறுகாயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


