
பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 100 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஏ.பீ.ஏ.ஜப்பார் தலைமையில் இவ் விளையாட்டு போட்டி இடம் பெற்றது
இதன் போது மாணவிகளின் விளையாட்டு நிகழ்வுகளும் அணி நடைகளும் பார்வையாளர்களை கவர்ந்திருந்ததோடு ,போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கலந்த சிறப்பித்தார். அத்தோடு மூதூர் வலைய கல்வி அலுவலகத்தின் உதவி மற்றும் பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள்,சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



