
முட்டைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும்?
நுகர்வோருக்கு தற்போது முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை தற்போது குறைந்துள்ளது. எனவே முட்டையை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
