
நீதிமன்ற அணிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி
-மூதூர் நிருபர்-
மூதூர், சம்பூர், சேருநுவர, ஈச்சிலம்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் அணிகள், மூதூர் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், மற்றும் மூதூர் நீதாவான் மாவட்ட நீதிமன்றில் கடமை புரியும் சட்டத்தரணிகள் அணிகளை உள்ளடக்கிய மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மூதூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி தஸ்னீம் பௌசான் அவர்களின் தலைமையில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
போட்டியில் சம்பியனாக ஈச்சிலம்பற்று மற்றும் சேருனுவர பொலிஸ் பிரிவை உள்ளடக்கிய அணி வெற்றி வாகை சூடிய அதே வேளை இப் போட்டியில் மூதூர் சட்டத்தரணிகள் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி ரன்னராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

