
2 கிலோ கஞ்சாவுடன் 26 வயது யுவதி கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் 2 கிலோ கஞ்சாவுடன் 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
முற்றவெளி மைதானத்தில் விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த பகுதிக்குள், நயினாதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயது யுவதி உள்நுழைய முயற்சித்துள்ளார். இதன்போது அவரை சோதனையிட்ட விமானப்படையினர் கஞ்சாவுடன் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான சட்ட நடவடிக்கைக்கு பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
