
தாண்டியடியில் சிலுவை தாங்கிய சிலுவைப்பயணம்
தாண்டியடி சிலுவை மலையில் சிலுவை தாங்கிய சிலுவைப்பயணம் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ மிக சிறப்பாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி உமரி வீதி அமைந்துள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கல்வாரி தியானமும் சிலுவை தாங்கிய பயணமும் சிறப்பாக இடம்பெற்றது
இந்த நிகழ்வுகள் பங்குத்தந்தை ஜேசன் லொயிட் அவர்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதிகலாநிதி .ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் தலையைில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்காண கத்தோலிக்க திருச்சபை மக்கள் கலந்து சிறப்பித்தனர்.



