காங்கேசன்துறையில் 22 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-

எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய மீனவர்கள் நேற்றையதினம் சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் மொத்தமாக 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.