
சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்திய பெண்கள்
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
