நீரில் மூழ்கி இருவர் மரணம்

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி பகுதியில் வசித்து வந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளனர்.

சில நண்பர்களுடன் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் பிரதேசவாசிகள் இருவரையும் மீட்டு மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.