இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணின் நிலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஹிக்கடுவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த திருடன் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இதன் போது வெளிநாட்டு பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ஏ.ரி.எம் அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஹிக்கடுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0718591457 அல்லது ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்திற்கு 0912277222 உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.