
6 பேர் படுகொலை : சந்தேகநபர் நீதிமன்றில் கூறியது
கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில், சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரம் 👇👇👇👇👇👇👇👇
