மட்டக்களப்பு ஈச்சரர் ஆலயத்தில் இடம்பெறும் நல்லெண்ணெய் திருமஞ்சம் சாத்துதல் நிகழ்வு

மட்டக்களப்பு ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள மட்டக்களப்பு ஈச்சரர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் திருமஞ்சம் சாத்துதல் காலை 6 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.

மயிலம்பாவெளி சவுக்கடி பிரதேசத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் நல்லெண்ணெய் திருமஞ்ச நிகழ்வானது இன்று மாலை 6 மணி வரை இடம்பெறுவதுடன் பலபிரதேசங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளனர்.

மேலும் இன்று மகா சிவன் ராத்திரியை முன்னிட்டு 4 சாம பூஜை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளதுடன் தமிழ் நாடு, கோயம்புத்தூர், பேரூர் ஆதீனம், 25 ஆவது குரு மகா சந்நிதானம் திருப்பெருந்திரு சாந்த லிங்கம் மருதாசல அடிகளார் காணொளி மூலம் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.