
சிவராத்திரியை முன்னிட்டு வேகநடை போட்டி
-மூதூர் நிருபர் –
சிவராத்திரியை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரையில் வேகநடை போட்டி காலை 7 மணியளவில் இடம் பெற்றது.
13 வயது தொடக்கம் 18 வயது மாணவிகளுக்கு இடையில் அடம்பெற்ற இந்த போட்டியில் திருக்கோணமலையின் பல்வேறு அறநெறி பாடசாலைகளை சேர்ந்த மாணவிகளும், பாடசாலை மாணவிகளும் கலந்து கொண்டனர்.
அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஆசீர்வாதம் பெற்று போட்டி ஆரம்பமானது. இதன்போது இரண்டு கிலோமீட்டர் தூரத்தை மாணவிகள் வெகுநடையில் நடந்து கடந்தனர்.
முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கும் மேலும் 10 மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் அனைவருக்கும் ஆதி யோகி சிவன் சிலையும், சான்றிதழும் பணப்பரிசல்களும் வழங்கப்பட்டன.
மாணவிகள் அனைவரும் கலாச்சார உடையில் போட்டியில் பங்குகொண்டு நடந்த காட்சி அருமையாக இருந்ததுடன் இவ்வாறான வேக நடை போட்டி இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.



