வாகன விபத்து: 2 இளைஞர்கள் படுகாயம்

-பதுளை நிருபர்-

நானுஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடையவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவை நோக்கி சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.