பெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த மகன் கைது

தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் நேற்று புதன் கிழமை களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்துள்ளதாகவும் அவருக்கு எதுவும் நினைவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.