முற்றத்தில் நின்ற காட்டு யானை: துரத்த முற்பட்ட நபர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்ட ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி செல்வபுரம் பகுதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

செல்வபுரம் பகுதியை சேர்ந்த கந்தையா சுரேஸ்குமார் (வயது – 50) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

கிராஞ்சி சிவபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் வீட்டு முற்றத்தில் யானை நிற்பதை அவதானித்த குடும்பஸ்தர் யானைகளை அங்கிருந்து துரத்துவதற்கு போராடியுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் அவரை யானை தாக்கியுள்ளது தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் கிராம மக்களின் உதவியோடு முழங்காவில் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிராம அலுவலகர் ஊடாக யானை வெடிகளும் வழங்கியுள்ளனர்.