
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் மகளிர் தினம் நிகழ்வு
மகளிர்தின நிகழ்வு தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரெட்ணம் தலைமையில் நேற்று புதன் கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பகுதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி உள்ள ஸ்ரீ முருகன் மைதானத்தில் கிழக்கின் ஆளுநரின் செந்தில் தொண்டமான் தலைமையில் மகளிர்தின நிகழ்வானது 6000 மகளிர்களை கொண்டு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவில் முறையாக இயங்கும் தெரிவு செய்யப்பட்ட 16 பெண்கள் ஆர்.டி.எஸ் அமைப்பினருக்கும் ஆளுநரால் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

