
அசிட் வீச்சில் ஐவருக்கு எரிகாயம்
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதன்கிழமை காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்காக வந்தவர், மற்றும் மனைவி, மூன்று குழந்தைகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரியின் புதிய நகரத்தில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பிரதான பிரதிவாதியை இலக்கு வைத்தே அசிட் வீச்சு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த கார் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையே அசிட் வீச்சை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
