முச்சக்கர வண்டி விபத்து: 5 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பசறை மீதும்பிபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பசறை கமெவெல பகுதியை சேர்ந்த 21,42,39,34,36 வயதுடையவர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி பசறை கமெவெல பகுதியில் இருந்து மீதும்பிபிட்டி தேயிலை தொழிற்சாலைக்கு சென்றதாகவும் அதில் 3 பெண்கள் சாரதி உட்பட 2 ஆண்கள் மொத்தமாக ஐவர் இருந்ததாகவும் ஐவரும் பலத்த காயமடைந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.