
இறைச்சிக் கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது
கடந்த ஓகஸ்ட் மாதம் கந்தானை பிரதேசத்தில் இறைச்சி கடை உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கந்தானை பிரதேசத்தில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதன் போது சந்தேக நபரிடம் இருந்து ரி 56 வகை துப்பாக்கி ஒன்றும்,45 தோட்டாக்கள் மற்றும் 2 மெகசீன்களும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்
டுபாயில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சூட்டி மல்லி கப்பம் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
