
பேருந்து மோதி உயிரிழந்த மாணவனின் இறுதி அஞ்சலி
கடந்த வெள்ளிக்கிழமை மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனான சி.பரணிதரனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேற்படி மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது இ.போ.ச பேருந்து மோதி உயிரிழந்திருந்தார்.
மாணவனின் மரணச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இடம்பெற்று தனங்கிளப்பு வீதியில் உள்ள கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்பட்ட சந்தர்பத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் டிறிபேர்க் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.
இதன்போது சக மாணவர்கள் அன்னாரது உடலை தோளில் சுமந்துகொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



