தாவடி சந்தியில் விபத்து: பெண் படுகாயம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.