பற்றி எரிந்த பாடசாலை கட்டிடம்

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் தீ பரவியுள்ளது.

அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும்இ தீயினால் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை விபத்தின் போது பாடசாலையில் 150 மாணவிகள் இருந்த போதிலும்இ அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.