மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: மனைவி மரணம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிகந்தஇ குடாபொகுன பிரதேசத்தை சேர்ந்த அப்துல் ஹமீத் ஜமீலா  (வயது – 53 ) என்கிற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை பார்த்துவிட்டு, வெலிகந்தயிலுள்ள தமது வீட்டுக்கு கணவனும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மனைவி உயிரிழந்துள்ளார்.