ஊழியர்களுக்கு விசேட வைரஸ் தடுப்பூசி

நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபையின் நகர சுகாதார பிரிவினால் உணவு மற்றும் பானங்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த 1 ஆம் திகதி முதல் இந்த வாரம் முழுவதும் டைபாய்ட் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள வசந்த விழாவிற்கு இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு வருகை தரவிருப்பதால், சலமெனெல்லா தொற்று மற்றும் உணவினால் பரவும் டைபாய்டு காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைவரின் உணவு நுகர்வு எதிர்கால பாதுகாப்பிற்காக இந்த தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக என கித்சிறி ஹேரத் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்