
வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
அனுராதபுரத்தில் வயலில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்த மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
