
கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
காலியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கரந்தெனிய – குருபேபில பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
