
பெண்களுக்கிடையில் மோதல்: சிறுமி உட்பட 4 பேர் வைத்தியசாலையில்
பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீகஹகிவுல – தல்தென, கல்கெலந்த பிரதேசவாசிகளே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
