
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
2023 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தி அடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 37 பாடசாலைகழள சேல்ந்த 400 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தேசபந்து அல்ஹாஜ் யுடுஆ.மீரா சாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட விரிவுரையாளர் k. பிரேம்குமார், பெண்கள் காப்பக பணிப்பாளர் சல்மா கம்சா மற்றும் சட்டத்தரணி முகைதீன் M.சாலி மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்





