
நம்நாட்டுக் கலைஞரின் “கருங்குலத்தான்” திரைப்படத்தின் இசை வெளியீடு
நம்நாட்டுக் கலைஞரை கதாநாயகனாக கொண்டு தென்னகத்தில் தயாரான “கருங்குலத்தான்” திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் குப்பிளானை பிறப்பிடமாகவும் பின்னர் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் திலக் இப்படத்தின் நாயகனாக நடித்திருப்பது பெருமைக்குரிய விடயம்.
படம் வெளிவருவதற்கு முன்னரே இவருக்கு பல்வேறு படவாய்ப்புகள் கைகூடி வந்துள்ளன.
விரைவில் இலங்கையிலும் புதிய படம் ஒன்றில் இவர் நடிக்க இருப்பதும் குறிப்பிடக்தக்கது.

