
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்
அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார்.
71 வயதான எஸ்.சி.முத்துகுமாரன அநுராதபுரம் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்தார்.
