
சிறுமிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் காணொளி பதிவு செய்த நபர் தொடர்பில் விசாரணை
பாடசாலை வகுப்பறையில் ஒன்றில் சிறு பிள்ளைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் காணொளி பதிவு செய்த நபருக்கு எதிராக கல்வி அமைச்சு உரிய ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில் ஒரு சிறு குழந்தையின் கேள்வியும் அந்த குழந்தையின் சங்கடமான பதிலளிக்கும் முறையும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தை பதிவு செய்த நபரை அடையாளம் காண விசாரணை நடத்தப்படும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டது உறுதியானால் அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
