கடமையில் இருக்கும்போதே பொலிஸ் பொலிஸ் சார்ஜன்ட் எடுத்த தவறான முடிவு

மாத்தறை – கொடவில நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இன்று செவ்வாய் கிழமை சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த 52 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து, இன்று மீண்டும் கடமைக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவலரணில் வைத்து இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.