கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது

 

காலியில் நேற்று திங்கட்கிழமை இயங்கும் நிலையில் இருந்த கைத்துப்பாக்கியுடன் யுவதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, இக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யுவதியின் மூத்த சகோதரன் இராணுவத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த வருடம் இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்