கணவரின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு

புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார்.

நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 13 மற்றும் 8 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாட்டியின் வீட்டில் மனைவி தங்கியிருந்த போது குறித்த வீட்டிற்கு வந்த கணவர் மனைவியை தடியால் தாக்கி காயப்படுத்தி காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு செல்ல விடாமல் தகராறு செய்துள்ளார்.

எனினும் உறவினர்களால் குறித்த பெண் முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவர் புத்தள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.