
“இளம் தலைவராக மாற்றத்தை கொண்டுவர நினைத்தேன் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை”
நாடாளுமன்றத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இளம் தலைவராக மாற்றத்தை உருவாக்கும் நம்பிக்கையில் தான் அரசியல் களத்தில் பிரவேசித்தேன், இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான வாய்ப்பு கிடைக்காததால், தனி மனிதனாக எனது பணியை முன்னெடுத்துச் செல்வது கடினமாக இருக்கிறது, என உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய காரணங்களை சுட்டிக்காட்டி உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
