திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில் வைத்து வெடி பொருட்களுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையே நபரே இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது டைனமைட் -03, டெட்டனேட்டர் -03, தீப்பெட்டி -02, கையடக்க தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இவ் வெடி பொருட்களை கடற்கரையில் வைத்திருந்தபோது சந்தேக நபரையும் வெடி பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈச்சிலம்பற்று பொலிஸில் தடுட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.