
செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கண்டல் தாவரங்கள் வளர்க்கும் செயற் திட்டம்
-கிண்ணியா நிருபர்-
ஒட்சிசனின் அளவை அதிகப்படுத்த கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய பிரதேங்களை பார்வையிட்டு உரிய வகையில் கண்டல் தாவரங்களை வளர்த்து எடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டல் மற்றும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அதிகாரிகள் குழு கிண்ணியாவுக்கு இன்று ஞாயிற்று கிழமை கள விஜயம் மேற்கொண்டிருந்தது.
கண்டல் தாவரங்களை வளர்த்து எடுத்து உலகளாவிய வெப்பத்தை குறைப்பதற்கும் ஒட்சிசனின் அளவைக் கூட்டிக் கொள்வதற்குமான ஒரு செயற்பாட்டுத் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் சுற்றுலா துறையை விருத்தி செய்து கரையோர பகுதிகளை அழகுப்படுத்தும் முகமாகவும் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட துறை சார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

