சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட படுகொலையா?

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணம் தொடர்பில் செய்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, திட்டமிட்ட படுகொலையாக இருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ) பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது உண்மையில் விபத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது சந்தேகத்திற்குரியது என, மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரங்கல் நிகழ்வின் போது அவர் தெரிவித்தார்.