யாழில் மாணவர்கள் மீது வாள்வெட்டு

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள் வெட்டு தாக்குதலுக்கு காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.