
தனது வீட்டிற்கு சிறுமியை கடத்தி சென்ற சிறுவன்
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய் கிழமை சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வரகையில்,
குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்ற முன் தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டுள்ளதுடன், சிறுவனை கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிஸாரால் , குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
