யாழில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக பதற்றம்

யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ். மீனவ சங்கங்கள் போராட்டமொன்றை இன்று செவ்வாய் கிழமை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராலயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்படனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் மாத்திரம் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்னர்.

இதன் போது போராட்டகாரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.