சவப்பெட்டிகளுடன் வெளியேறிய உண்ணா விரதகாரர்கள்

ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலையிட்டால் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் இன்று செவ்வாய் கிழமை முடிவுக்கு வந்துள்ளது.

செங்கலடி பிரதேச செயலகத்தில் அமைச்சர் வியாழேந்திரனின் தலையீடு உள்ளதாக கூறி மூவர் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் சவப்பெட்டிகளை வைத்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் நடாத்தி வந்த நிலையில் கணபதிப்பிள்ளை மோகன், அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து போராட்டக்காரர்களுடன் பேசி சவப்பெட்டி போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன் போது செங்கலடி பிரதேச செயலகத்தின் செயற்பாட்டில் அரசியல் தலையீடு இருக்காது என்று செங்கலடி பிரதேச செயலாளர் உறுதி மொழி அழித்துள்ளார்.