
மின்சார கம்பிகளை திருடிய மூவர் கைது
கண்டி பகுதியில் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின்சார கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் மூவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்சார கம்பிகளை ஏற்றிச் சென்ற லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை மின்சார சபையினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 அடி உயரத்தில் பொருத்தப்பட்டிருந்த 560 மீற்றர் நீளம் கொண்ட மின்சார கம்பிகளை அறுத்துள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 11,44 640 ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
