
கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்
அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
