
ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய “தேசாந்தரம்” குறுநாவல் வெளியீடு
-கிண்ணியா நிருபர்-
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய தேசாந்தரம் குறுநாவல் வெளியீட்டு விழா
கதிர்.திருச்செல்வத்தின் தலைமையில் நேற்று ஞாயிற்று கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலக
திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ் பெற்றுகொண்டதுடன் நூலுக்கான திறனாய்வினை பொதுச்
சுகாதார உத்தியோகத்தர் வ.முரளிதரன் சிறப்பாக வழங்கினார்.
ஏற்புரையை நூலாசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம்
வழங்கிய போது குறுநாவல் எழுந்த பின்னணி பற்றிக் கூறியதுடன் வெகுவிரைவில் தனது நாவல் வெளிவரவுள்ளமை பற்றியும் கருத்து தெரிவித்தார்.

