கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீடொன்றில் இருந்து இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.